ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடச் சென்ற அமைச்சர்
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பார்வையிடச் சென்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தற்பொழுது அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றார்.
ரஞ்சனை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று பார்வையிடச் சென்றுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும், ரஞ்சனை பார்வையிடச் சென்றிருந்தார்.
ரஞ்சனை விடுதலை செய்ய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சஜித் சூளுரைத்துள்ளார்.