யாழ். மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் நாமல் ராஜபக்ச
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று மதியம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் சென் பொஸ்கோ பாடசாலை அருகில் புனரமைக்கப்பட்டுவரும் குளம், ஐ திட்ட வீதி, ஆஸ்பத்திரி வீதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டம், யாழ். மாநகர சபை புதிய கட்டடம் என்பவற்றைப் பார்வையிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றைத் துரிதப்படுத்தும் நோக்கிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத் காசிலிங்கம், யாழ். மாநகர மேஜர் மணிவண்ணன், யாழ்ப்பாண பிரதேச செயலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பாசையூரில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் புனரமைக்கப்படவுள்ள நல்லூர் கலைமகள் விளையாட்டு மைதானம், பல்பரிமாண நகரத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ள மருதனார்மடம், மத்திய கல்வி அமைச்சின் கீழ் இடம்பெற்று வருகின்ற தெல்லிப்பளை அருணோதய பாடசாலைக் கட்டடம், வறுத்தலைவிளானில் காணியற்ற குடும்பங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி திட்டங்கள்,
நாவற்குழியில் யாழ்ப்பாண - கிளிநொச்சி நீர் விநியோக திட்டத்தையும்
பார்வையிடவுள்ளார்.




ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri