பிரதமர் மாவத்தகம யடிவல ஸ்ரீ குணவர்தனாராம விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டார்
பிரதமர் மகிந்த ராஜபக்ச மாவத்தகம யடிவல ஸ்ரீ குணவர்தனாராம விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.
யடிவல ஸ்ரீ குணவர்தனாராம விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஹுணுபொல ஷாந்ததேவ தேரரை நேற்று (05) பிற்பகல் சந்தித்த பிரதமர், அவரிடம் நலன் விசாரித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அதனை தொடர்ந்து அண்மையில் திறந்துவைக்கப்பட்ட புத்தர் சிலையுடனான விகாரை பீடத்திற்கு விஜயம் செய்த பிரதமர் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார்.
பிலெஸ்ஸ ஸ்ரீ போதிமலு விகாராதிபதி ஹுணுபொல சரணபால தேரர், வடமேல் மாகாண உப பிரதான சங்கநாயக்கர் கொடிகாபொல சாரானந்த தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.
பிரதமருடன் குறித்த வழிபாட்டு நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன்
பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமித் உடுகும்புர, மஞ்சுளா
திஸாநாயக்க, மாவத்தகம பிரதேச சபை தவிசாளர் கமல் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டிருந்தனர்.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
