தமிழீழ விடுதலைப் புலிகள் மீது பாரிய குற்றச்சாட்டுகளை சுமத்திய அமைச்சர் பிமல்
தமிழீழ விடுதலைப் புலிகள் சில தலைவர்கள் தங்களின் போராட்ட நடவடிக்கைகளுக்காக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாரிய குற்றச்சாட்டு ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
ஒதுக்கீட்டு சட்ட மூலத்தின் பாதுகாப்பு அமைச்சு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
தொடரந்து பேசிய அவர்,
வடக்கில் போதை பொருள்
வடக்கில் கசிப்பு மற்றும் கஞ்சா,போதை பொருட்களால் வறுமையில் வாழும் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.நாங்கள் முன்னெடுக்கும் போதை பொருள் ஒழிப்புக்கு வடக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.
வடக்கிலும் பாதுகாப்பு தரப்பில் சிலர் போதை பொருள் வியாபாரத்தில் தொடர்புபட்டிருக்கின்றனர். போதை பொருள் ஒழிப்பில் ஏன் வடக்கையையும் தெற்கையும் ஏன் இணைக்க முடியாது.வடக்கில் தான் யுத்தத்திலும் அடிவாங்கிய மக்கள் போதை பொருள் மற்றும் கேரள கஞ்வா போன்றவற்றிலும் அடிவாங்குகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா கொண்டுவரவில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வன்னி மாவட்டத்தில் எவ்வித புதிய இராணுவ முகாம்களும் அமைக்கப்படவில்லை.இருக்கும் சில இராணுவ முகாம்களை அகற்றி வருகின்றோம்.