நாமல் ராஜபக்சவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் ஆனந்த விஜயபால!
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு உண்டு என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால குற்றம் சுமத்தியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றில் இன்று (18.11.2025) உரையாற்றுகையிலேயே ஆனந்த விஜயபால இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
அண்மையில் இந்தோனேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பல்களை சேர்ந்த சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை
இந்த விசாரணைகளின் போது நாமல் ராஜபக்சவிற்கு அவர்களுடன் தொடர்பிருந்தமை தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த விவகாரம் தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுக்களுடன் நாமலுக்கு காணப்படும் தொடர்பு குறித்தும் தற்பொழுது விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுக்களுடன் காணப்படும் தொடர்பு குறித்து எதிர்வரும் காலத்தில் வெளிப்படுத்த முடியும் விசாரணைகளின் பின்னர் அவற்றை வெளியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் போதை பொருள் விற்பனை செய்யவில்லை எனவும் எங்கள் தரப்பு மீது குற்றம் சுமத்த வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கஞ்சா சுரங்க, சொத்தி உபாலியின் மகன் போன்றவர்கள் பற்றியும் தம்மால் கூற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகள்
தேசியே மக்கள் சக்தி மீது எவருக்கும் குற்றம் சுமத்த முடியாது, இந்த நாட்டு அரசாங்கம் எவ்வாறு ஆட்சி செய்கின்றது என்பது பற்றி அறிந்து வைத்துள்ளனர்.
நாடாளுமன்றில் சேறு பூசுவதற்கு இடம் அளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அதிகாரிகள் மீது எதிர்க்கட்சி அநீதியான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவி செனவிரட்ன, ஷானி அபேசேகர பொலிஸ் மா அதிபர் ஆகியோர் மீது சேறு பூசப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்ளும் போது அளித்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நாட்டில் இனவாத மதவாத செயற்பாடுகளுக்கு இனி இடமளிக்கப்படாது என ஆனந்த விஜயபால குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |