மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹலியவின் குடும்பம்
புதிய இணைப்பு
பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் அவருடைய மகள் ஆகியோர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மூன்றாம் இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்பபடுத்தப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மனைவியும் மகளும் ஊழல் மற்றும் பணமோசடி விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் மாற்றியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தோடு கைது
அவர்கள் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று (18) காலை அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்


ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
