கூடுதல் விலைக்கு மருந்து விற்பனை செய்த மருத்துவர் உள்ளிட்ட குழுவினர் கைது
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் கூடுதலான விலைக்கு மருந்துகளை விற்பனை செய்த சிறப்பு மருத்துவர் ஒருவர் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீஜயவர்த்தனபுர மருத்துவமனையில் பணியாற்றும் சிறப்பு மருத்துவ நிபுணரான பெண் ஒருவரும், மேலும் இரண்டு பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்றாம் தரப்பினர்
மூன்றாம் தரப்பினர் ஊடாக மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட இவர்களை கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் ஹர்ஷண கெகுலாவல முன்னிலையில் முன்னிலை செய்த போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    
    
    
    
    
    
    
    
    
    Bigg Boss 9: தெறிக்க விட்ட திவ்யாவையே வாயடைக்க வைத்த திவாகர்... எதிர்பாராத பிக் பாஸ் ப்ரொமோ Manithan
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan