மின்சக்தி அமைச்சர் கஞ்சன எடுத்துள்ள நடவடிக்கை
அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள மின்சார சபையின் மறுசீரமைப்புக்கான திட்ட வரைபடம் மற்றும் உத்தேச காலக்கெடு தொடர்பாக அனைத்து தரப்பினருக்கும் தெரியப்படுத்துவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக மறுசீரமைப்புக் குழுவும் இணைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி இன்று காலை மின்சார சபையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம், அமைச்சர் மற்றும் குழுவினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பூரண ஆதரவு
இதன்போது, இந்த உத்தேச செயற்பாட்டிற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக சிரேஷ்ட மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு மேலதிகமாக, தற்போது சேவையில் உள்ள அதிகாரிகள் தங்களின் பணிக்கொடை, ஓய்வூதியம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துதல் மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்தனர்.