மாங்குளம் நீதிமன்ற கட்டடத்தொகுதி நீதி அமைச்சரினால் திறந்து வைப்பு (Photos)
முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நீதிமன்ற கட்டடத்தொகுதியினை நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நீதிமன்றத்தில் கடமையாற்றிய அதிகாரிகளின் அயராத முயற்சியின் பயனாக முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் சுற்றுலா நீதிமன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
ஆரம்பகாலத்தில் துணுக்காய் பகுதியில் இடம்பெற்ற இந்த நீதிமன்றத்தின் செயற்பாடுகள் காலப்போக்கில் மாங்குளத்தில் நிரந்தர கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்தது.
அந்த வகையிலே மாங்குளத்தில் நீதிமன்ற கட்டடத் தொகுதி ஒன்று அமைக்கப்பட்டு தற்போது வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அங்கு வழக்கு விசாரணைகள் இடம் பெறுகின்றது.
குறிப்பாக மாங்குளம், மல்லாவி, ஐயன்கன்குளம், நட்டாங்கண்டல் உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் வருகின்ற வழக்குகள் புதன்கிழமைகளில் இங்கே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த மக்களின் நலன் கருதி மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டடத் தொகுதியினை இன்றைய தினம் வைபவ ரீதியாக நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி திறந்து வைத்தார்.
இன்று மாலை 3 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் நாட்டினுடைய நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முல்லைத்தீவு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய காதர் மஸ்தான் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் சட்டத்தரணிகள் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
காலப்போக்கில் குறித்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் வாரத்தின் 5 நாட்களும்
இடம் பெறக்கூடிய வகையில் தனியாக நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுக் குறித்த
நீதிமன்றம் இயங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.








6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
