இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எழுத்துபூர்வ சமர்ப்பிப்பை அனுப்பிய அமைச்சர்
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்திடம் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தமது சட்டப்பூர்வ பிரதிநிதித்துவங்களைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குமார ஜெயக்கொடியின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முன் எழுத்துப்பூர்வமாக தமது சமர்ப்பிப்பை பரிசீலிக்குமாறு அமைச்சர் கோரியுள்ளார்.

அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
முன்னதாக, அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணையகம், அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்கவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த நிலையிலேயே அமைச்சரின் சட்ட பிரதிநிதித்துவங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கேள்விப்பத்திர விடயம் ஒன்றில் 8 மில்லியன் ரூபாய் முறைகேடு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் அமைச்சர் மற்றும் இருவர் மீது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri