அநுரவின் யாழ்ப்பாண விஜயம்! அமைச்சர் சந்திரசேகரின் பெருமிதம்
யாழ்ப்பாணம் - வேலணைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வருகை தந்தமை, மக்களின் துன்பங்கள் விரைவில் நீங்கும் என்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று(15.01.2026) வேலணை பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தி திட்டங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் தீவகப் பகுதிகளில் ஒன்றான வேலணையில் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

எமது ஆட்சியில் தீவக அபிவிருத்தியில் அதி முக்கிய கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஆட்சிகளை போல் அல்லாது நாட்டினுடைய மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களை தேடி எமது அரசாங்கத்தின் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறான ஒரு அபிவிருத்தி திட்டத்தில் வேலணையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்காக அண்மையில் ஜனாதிபதி அடிக்கல் நாட்டி இருந்தார்.
கிரிக்கெட் மைதானம்
கிரிக்கெட் மைதானத்தை வேலணையில் அமைப்பதன் மூலம் வேலணை என்ற பெயரை சர்வதேசம் வரை அறியச் செய்தவர் வேறு யாரும் அல்ல எமது நாட்டின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தான்.

எமது அரசாங்கத்தை பற்றி பலர் கேலி செய்தார்கள், அரசாங்க அதிகாரிகள் எம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள் ஆட்சி நடத்துவது கடினம் என்றார்கள். நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது விமர்சனங்கள் அனைத்தையும் சிதறடிக்கும் வகையில் அரச அதிகாரிகள் இரவு பகலாக எம்மோடு இணைந்து அனர்த்தத்தை வெற்றி கொள்வதற்கு அரும்பாடுபட்டார்கள்.
ஆகவே எமது அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். திருடர்களுக்கான அரசாங்கம் கிடையாது. மேலும், மக்களுடன் இணைந்து பயணிக்கின்ற போது பலவற்றை சாதிப்போம் என உறுதியளித்துள்ளார்.

ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam