போலிப் பரப்புரை மூலம் இந்த ஆட்சியை எந்தத் தரப்பாலும் கவிழ்க்கவே முடியாது! அமைச்சர் சந்திரசேகர்

Colombo Sri Lanka Economy of Sri Lanka Ramalingam Chandrasekar
By Rakesh Aug 20, 2025 09:14 AM GMT
Report

இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர், இந்தப் போலிப் பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர், ஆனால் போலிப் பரப்புரை மூலம் இந்த ஆட்சியை எந்தத் தரப்பாலும் கவிழ்க்க முடியாது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை ஐயப்ப சுவாமிமார்களின் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியதன் பின்னர் அது தொடர்பான விசேட கலந்துரையாடல் கொழும்பு செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சிறப்பு அதிதியாகவும், இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புக்கள், குரு சுவாமிகள் மற்றும் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கௌரவிப்பு

இதன்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் இருந்து வருகை தந்த ஐயப்பசாமி குருமார்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர்களை குருசுவாமிகள் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர்.

போலிப் பரப்புரை மூலம் இந்த ஆட்சியை எந்தத் தரப்பாலும் கவிழ்க்கவே முடியாது! அமைச்சர் சந்திரசேகர் | Minister Chandrasekar Statement

இதன்போது அமைச்சர் மேலும் கூறுகையில், ஐயப்பன் யாத்திரை கடந்த காலங்களில் புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டும் ஏன் அத்தனை வருடங்கள் நடக்கவில்லை? இனவாத ஆட்சியாளர்கள், இனவாத அமைச்சரவை இருந்ததால்தான் நடக்கவில்லை. ஆனால் எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை.

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

மக்கள் நலனுக்கே முக்கியத்துவம், முன்னுரிமை வழங்கப்படுகின்றது. அந்தவகையில் புனித யாத்திரை தொடர்பான அமைச்சரவை பத்திரம் வந்தபோது அதற்கு ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முழுமையாக முன்னின்று செயற்பட்ட பிரதி அமைச்சர் தோழர் பிரதீப்புக்கு நன்றிகள். இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர். சமூக சீர்கேட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

வறுமை ஒழிப்புக்குரிய நடவடிக்கை

எனவே, சமூக மாற்றத்துக்கு ஆன்மீகவாதிகளின் பங்களிப்பும் மிக முக்கியம். அதேவேளை, வறுமை ஒழிப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மறுபுறத்தல் வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதார இலக்குகளை அடைந்து வருகின்றோம். இந்நிலையில் ஆட்சி மாற்றம் பற்றி வங்குரோத்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

போலிப் பரப்புரை மூலம் இந்த ஆட்சியை எந்தத் தரப்பாலும் கவிழ்க்கவே முடியாது! அமைச்சர் சந்திரசேகர் | Minister Chandrasekar Statement

இதற்கு உயிர்கொடுக்கும் வகையில் வடக்கில் தோல்விகண்ட, மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர். ஆனால், போலிப் பரப்புரை மூலம் இந்த ஆட்சியை எந்தத் தரப்பாலும் கவிழ்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். 

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US