அமைச்சா்களின் - பிரமுகா்களின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்படவேண்டும்: தயாசிறி ஜெயசேகர
இலங்கையில் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் வாகனங்களுக்கு பின்னால் பயணிக்கும் பாதுகாப்பு வாகனங்களை பயன்படுத்துவதை எவராவது நிறுத்தினால் அது பெரும் நிவாரணமாக அமையும் என கைத்தறி மற்றும் உள்ளுர் ஆடை உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது முகங்கொடுத்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் நாட்டின் நலனுக்காக இது அவசியம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்
நாட்டில், அமைச்சர்கள் உட்பட அமைச்சகத்தின் செலவுகள் முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்ய, கட்டுமானம், புனரமைப்பு அல்லது தளபாடங்கள் கொள்வனவு செய்வதற்குக் கூட அமைச்சகங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த நெருக்கடி வரும் ஆண்டுகளில் இன்னும் மோசமாகும்.
இந்த அா்ப்பணிப்பை மேற்கொள்வது யதாா்த்தமாகும்.
இந்தநிலையில் பாதுகாப்பு வாகனங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த யாராவது முன்வந்தால் அது பெரிய நிம்மதியாக இருக்கும் என்றும் தயாசிறி ஜெயசேகர குறிப்பிட்டுள்ளாா்..
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan