பாடசாலை பெயர் பலகைகளுக்காக மட்டும் மில்லியன் செலவு
809 மாகாணப் பாடசாலைகள் "தேசியப் பாடசாலைகள்" என மாற்றப்பட்டதற்காக, பெயர் பலகைகள் அமைப்பதற்கே ரூ. 2.4 மில்லியனுக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது என்பது, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) முன்னிலையில் அண்மையில் தெரிய வந்துள்ளது.
இந்த பாடசாலைகள் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதுடன், தேவையான வசதிகள் எந்தவொரு பாடசாலைக்கும் வழங்கப்படவில்லை என்றும் குழுவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் அதிகாரிகள், கோபா குழுவில் அண்மையில் முன்னிலையானபோது, இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்தன.
விரிவான அறிக்கை
அத்துடன், முந்தைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டு, 1,000 தேசியப் பாடசாலைகள் என்ற இலக்கை நோக்கி முன்னெடுக்கப்பட்ட திட்டம் மற்றும் இராஜாங்க அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட 72 தனிப்பட்ட திட்டங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்களைப் பற்றி விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் கோரப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



