ரஷ்யாவை எதிர்கொள்ள பல லட்சம் பலம் வாய்ந்த உக்ரைன் படையினர்
உக்ரைன் நாட்டின் தென் பகுதிகளை, ரஷ்யர்களின் ஆக்கிரமிப்பதில் இருந்து மீட்பதற்காக நேட்டோ ஆயுதங்களுடன் கூடிய பல லட்சம் பலம் வாய்ந்த இராணுவத்தைகளமிறக்க திட்டமிடப்படுவதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார்.
கருங்கடல் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்டெடுப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது என்று அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார்.
குடியிருப்பு மீது தாக்குதல்
கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யா முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மீது
நடத்தப்பட்ட ரஷ்ய தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதுடன், 20 க்கும்
மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.