புடினை திருப்பி அடிக்க தயாராகும் உக்ரைன் - பிரித்தானியாவில் சிறப்பு பயிற்சி எடுக்கும் வீரர்கள்
ரஷ்யப் படைவீரர்களை எதிர்கொள்வதற்காக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் நூற்றுக்கணக்கானோர், பயிற்சி பெறுவதற்காக பிரித்தானியா வந்துள்ளார்கள்.
ஒரு நாட்டின் மீது அராஜகமாக போர் தொடுத்த புடின், போர் செய்தே தீருவேன் என அடம்பிடித்துக்கொண்டிருக்கும்போது, தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போரிடும் உக்ரைனியர்கள் தயாராகியுள்ளனர்.
புடினுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என உக்ரைனும் புதிதாக வீரர்களை களமிறக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், போரிட பயிற்சி வேண்டுமே. ஆகவே, அவர்களுக்கு பிரித்தானியா பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.
இதன்படி, நூற்றுக்கணக்கான இளம் உக்ரைன் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக பிரித்தானியா வந்துள்ளார்கள். இரகசிய இடங்களில் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் 7,000 வீரர்களை காணவில்லை
இதேவேளை, உக்ரேனிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் 7,200 உக்ரேனிய வீரர்கள் காணாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது.
விசேஷ சூழ்நிலையில் காணாமல் போனவர்களின் விவகாரங்களுக்கான ஆணையர் Oleg Kotenko, காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் கைதிகள் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.
"நாங்கள் இராணுவத்தைப் பற்றி பேசுகிறோம் என்றால், இராணுவம் யார் என்பதை புரிந்துகொள்வோம். உக்ரைனின் ஆயுதப்படை உள்ளது, தேசிய காவலர் உள்ளது, எல்லைக் காவலர்கள் உள்ளனர், SBU உள்ளன, இவை வெவ்வேறு நிறுவனங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் ஆயுதப் படைகள் வழங்கிய புள்ளிவிவரத்தில் அவை சேர்க்கப்படவில்லை. உக்ரைனின் ஆயுதப் படைகள் காணாமல் போன இரண்டாயிரம் வீரர்களின் தரவுகளைத் தருகின்றன. எங்கள் அழைப்பு மையத்தில் சுமார் 7,200 பேர் உள்ளனர்.
அவர்கள் ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும்.முதலில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருந்தால், நடைமுறையில் முழு பட்டாலியனும் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.