வறுமையில் இருந்து செல்வந்தர்: கோடீஸ்வரரான இலங்கையின் துப்புரவு தொழிலாளி
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் இலங்கையில் பிறந்த வினுல் கருணாரத்ன துப்புரவுத் தொழில் செய்து கோடீஸ்வரராகியுள்ளார்.
இதனை அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று, ''இது ஒரு உண்மையான வறுமையில் இருந்து செல்வந்தரின் கதை'' ("ராக்ஸ் டு ரிச்சஸ் ஸ்டோரி” (rags to riches story) என்று குறிப்பிட்டுள்ளது.
25 வயதான கருணாரத்ன தனது பகுதிநேர வேலையை முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டதாக செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு
இந்தநிலையில் வினுல் கருணாரத்ன தனது கனவு கார் மற்றும் இலங்கையில் உள்ள தனது பெற்றோருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் அளவுக்கு சம்பாதித்துள்ளார்.
"நீங்கள் எவ்வளவு வேகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு வேலைகளைச் செய்து முடிக்க முடியும், மேலும் அதிகப் பணம் சம்பாதிக்க முடியும்" என்று அவர் தமது நேர்காணல் செய்த தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
இதேவேளை இணைய மற்றும் கையடக்கபேசி சந்தையை வழங்கும் அவுஸ்திரேலிய நிறுவனமான Airtasker இன் தரப்பட்டியலின்படி, சிறந்த 10 வருமானம் ஈட்டுபவரில் கருணாரத்னவும் உள்ளடங்கியுள்ளார்
ஏர்டாஸ்கர் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஃபங் இது தொடர்பில் கூறும்போது, கடினமாக உழைப்பதன் மூலம் எவரும் தீவிரமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |