அநுரவின் ஊடாக இந்தியாவை முடக்க தயாராகும் அமெரிக்கா
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவின் ஊடாக இந்தியாவை முடக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்குள் இந்தியாவின் ஊடுருவலை தடுக்கும் இரகசிய நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில், இலங்கையின் புதிய அரசும் நாடாளுமன்றமும் இந்தியாவிற்கு முக்கியமானதாகவே கருதப்படுகின்றது.
இதனை இந்தியா தவறவிடும் பட்சத்தில் அமெரிக்கா மற்றும் அநுரவிற்கிடையில் காணப்படும் நல்லுறவு இந்தியா - இலங்கைக்குள் தலையிடுவதற்கான முடக்கமாக காணப்படும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த பின்னணியிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை சந்தித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்திருந்தார்.
இதனை தீவிரமாக கண்காணித்து வரும் அமெரிக்கா இந்தியாவின் பொருளாதாரம், அரசியல் என்பனவற்றினை குறிவைத்து இரகசிய நகர்வுகளை முன்னெடுத்து தகர்த்து வருகின்றது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த விடயங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனஞ்சயன் வெளியேற்றம்! பலர் வெளியேற தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |