கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்
புதிய இணைப்பு
கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மாணவி தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 16 -18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ள நிலையில், அவர் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தாமரை கோபுரத்திற்கு தனியாக சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் கைப்பை தாமரை கோபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தாமரை கோபுரத்தின் 29ஆவது மாடியில் உள்ள கண்காணிப்பு அறையில் அவர் இருந்ததாகவும், 3ஆவது மாடியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், மருதானை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர், கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் கொள்ளுப்பிட்டியை சேர்ந்த ராத்யா குணசேகர என்ற மாணவி எனவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் தோழி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இருவரின் மரணத்தினால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் மாணவின் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பாடசாலை
சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாணவி வீழ்ந்தமை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
