கிளிநொச்சி மாவட்ட காலபோக பயிர்ச்செய்கைக்காக மில்லியன் ரூபாய் நிதி வைப்பு
அரச கொள்கைகளுக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024/2025 ஆண்டு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென 454.49 மில்லியன் ரூபாய் நிதி வைப்பிலிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி, உருத்திரபுரம், இராமநாதபுரம், அக்கராயன்குளம், புளியம்பொக்கனை, முழங்காவில், பூநகரி, பரந்தன், கண்டாவளை, பளை ஆகிய கமநல சேவை பிரிவுகளுக்கென குறித்த நிதி ஓதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.
விவசாயிகள் தங்களது கணக்கிலக்கங்கள்
முதற்கட்டமாக ஏக்கர் ஒன்றுக்கு 15,000 ரூபா வீதமும் இரண்டாம் கட்டமாக ரூபா 10,000 வீதமும் விவசாயிகளின் கணக்கிலக்கங்களுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக கண்டாவளை கமநல சேவை பிரிவிற்கு 1249.2467 ஏக்கருக்கு 12492467 ரூபாவுமாக வைப்பிலிடப்பட்டுள்ளது.
இந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024/2025 ஆண்டு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென முதற்கட்டத்தில் மொத்தமாக 272,818,048.50 ரூபாவும் இரண்டாம் கட்டத்தில் 181,669,857.00 ரூபாவுமாக மொத்தமாக 454,487,905.50 ரூபாய் நிதியானது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் தங்களது கணக்கிலக்கங்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது வைப்பிலிடப்பட்டுள்ளதா என்பதனை உறுதிபடுத்திக்கொள்வதோடு பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் தங்களது கமநல சேவை நிலையங்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |