900க்கும் மேற்பட்ட முறை ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்.. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
கடந்த 2025 ஒக்டோபர் 10ஆம் திகதி காசா பகுதியில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தை 900-க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போர் நிறுத்தக் காலத்தில் மட்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது 414 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,145 பேர் காயமடைந்துள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள், பீரங்கிச் சூடு மற்றும் நேரடித் துப்பாக்கிச் சூடு எனப் பல்வேறு வழிகளில் இந்த மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் இந்த போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, காசாவில் மோதல்களை நிறுத்துதல், பணயக் கைதிகளை விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தடையின்றி அனுமதித்தல் போன்றவை முக்கிய நிபந்தனைகளாக இருந்தன.
நடத்தப்பட்ட தாக்குதல்
ஆனால், கடந்த 81 நாட்களில் 67 நாட்கள் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் அல் ஜசீரா ஆய்வு தெரிவிக்கிறது. உதவிப் பொருட்கள் கொண்டு செல்வதிலும் கடும் சிக்கல்கள் நீடிக்கின்றன.

ஒப்பந்தப்படி அனுமதிக்கப்பட வேண்டிய லொரிகளில் வெறும் 42 சதவீத லொரிகள் மட்டுமே காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துள்ள உணவுகளுக்குப் பதிலாக தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற பொருட்களே அதிகம் அனுப்பப்படுவதாகவும், இஸ்ரேலிய சோதனைகளால் மனிதாபிமான உதவிகள் காலதாமதமாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
2023 ஒக்டோபர் 7 முதல் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 71,266 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், இதில் 20,000-க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் நிறுத்தம் அமுலில் இருப்பதாக அமெரிக்கா கூறினாலும், கள யதார்த்தம் பாலஸ்தீனியர்களுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளது. குறிப்பாக ரஃபா பகுதியில் நடந்த தாக்குதல்களை "பதிலடி" என்று கூறி ஜனாதிபதி ட்ரம்ப் நியாயப்படுத்தியிருப்பது உலக நாடுகளிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam