மிலேனியம் சிட்டி ஆயுதக் களஞ்சியம் வழக்கு! முன்னாள் பொலிஸ் அதிகாரி விடுதலை

Aanadhi
in சட்டம் மற்றும் ஒழுங்குReport this article
மிலேனியம் சிட்டி ஆயுதக் களஞ்சியம் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று(27.03.2025) மாலை கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேயினால் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 2002ஆம் ஆண்டில் அதுருகிரிய மிலேனியம் சிட்டி வீட்டுத் தொகுதியில் செயற்பட்ட மர்ம ஆயுதக் களஞ்சியம் ஒன்று அப்போதைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பலவினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.
நீண்டகால வழக்கு
அதன்போது, அங்கிருந்த ஆயுதங்கள் மற்றும் சந்தேக நபர்களின் விபரங்கள் பத்திரிகைகள் உள்ளிட்ட தேசிய ஊடகங்களில் வெளியானது.
எனினும், குறித்த ஆயுதக் களஞ்சியம் இராணுவத்தின் இரகசிய நடவடிக்கை மற்றும் புலனாய்வுப் பிரிவின் ஆயுதக் களஞ்சியம் என்பது பின்னாளில் தெரிய வந்ததுடன், இராணுவ இரகசியங்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டி சோதனை மேற்கொண்ட பொலிஸாருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
நீண்டகாலமாக நடைபெற்ற வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் உள்நோக்கத்துடன் மேற்குறித்த சோதனை நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், இராணுவத்தினரை சிக்கலில் மாட்டிவிடும் நோக்கமோ, இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தும் நோக்கமோ அவர்களிடம் இருந்தமை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து குலசிறி உடுகம்பொல உள்ளிட்ட சந்தேக நபர்கள் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |