எரிபொருள் தாக்கம்! பால்மா மற்றும் கோதுமை மாவின் விலை குறித்து வெளியான அறிவிப்பு
இறக்குமதி செய்யப்பட்ட பால் மா மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படாது என்று வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (23) வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவை சந்தித்தபோது, பால் மா இறக்குமதியாளர்களும் கோதுமை மாவு நிறுவனங்களும் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
விநியோக மற்றும் பகிர்வு வலையமைப்புகளில் தாக்கம்
நிலவும் போர்ச் சூழல் காரணமாக விநியோக மற்றும் பகிர்வு வலையமைப்புகளில் ஏற்படும் தாக்கம் மற்றும் தடையற்ற விநியோகத்தைப் பேணுவது குறித்து இரு குழுக்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.

எரிபொருள் விலை உயர்வு மற்றும் டொலரின் மதிப்பு உயர்வு ஆகியவை தங்களின் உற்பத்திச் செலவுகளில் சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த இக்கட்டான நேரத்தில் அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு சில நிவாரணங்களை வழங்க முடியும் என்று நம்புவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இறக்குமதி செய்யப்பட்ட பால் மா மற்றும் கோதுமை மாவு நிறுவனங்கள், இன்னும் மூன்று மாதங்களுக்குத் தேவையான இறக்குமதி செய்யப்பட்ட பால் மா மற்றும் கோதுமை மாவு கையிருப்பு இருக்கும் என்றும், வரவிருக்கும் புத்தாண்டு காலம் முடியும் வரை விலை உயர்வு எதுவும் செய்யப்படாது என்றும் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளன.
எரிபொருள் ஒதுக்கீடு
எரிபொருள் ஒதுக்கீடு காரணமாக விநியோகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா மற்றும் கோதுமை மாவு நிறுவனங்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளன.
உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவை வழங்குநர்களின் எரிபொருள் தேவைகளைக் கண்டறிவதற்கும், அத்துறையின் திட்டமிடலைச் சீரமைப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறப்புத் தரவு சேகரிப்புத் திட்டத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சர் அந்த நிறுவனங்களுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam