திடீர் மின்வெட்டு! ஆட்பதிவு திணைக்களத்தில் அடையாள அட்டைகளை வழங்குவதில் சிக்கல்
புதிய இணைப்பு
நாளை முதல் அடையாள அட்டைகள் வழக்கம் போல் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று அடையாள அட்டைகள் வழங்கும் பணி தடைபட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வந்த மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தரமுல்லை, 'சுஹுருபாய' (Suhurupaya) கட்டடத்தில் அமைந்துள்ள திணைக்களத்தில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென செயலிழந்த அமைப்பு
இந்த மின்வெட்டினால், அடையாள அட்டைகள் வழங்கும் அமைப்பு திடீரென செயலிழந்துள்ளது.

இருப்பினும், மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்ட போதிலும், அந்த அமைப்பு இன்னும் இயக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைப்பினை விரைவில் மீண்டும் இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெஹ்ரானில் உச்சக்கட்ட பதற்றம்! அடுத்தடுத்து பதிவாகும் வெடிப்பு சத்தங்கள்: அதிரடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 22 மணி நேரம் முன்
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam