வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதியவருக்கு உதவிய இராணுவத்தினர்(Photos)
வவுனியாவில் வசிக்கும் அன்னையொருவருக்கு இராணுவத்தினரின் நிதி உதவியுடன் மரக்கறி கடை ஒன்று கட்டப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா - கனகராஜன் குளத்தில் வசிக்கும் விக்னேஸ்வரி இராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மரக்கறி கடை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடைக்கப்பட்டு அங்கு இருந்த பொருட்கள் திருடப்பட்டது.
இதனையடுத்து குறித்த அன்னையின் வாழ்வாதாரம் பின்தங்கியிருந்ததையடுத்து குறித்த பகுதியில் உள்ள 561வது காலாட்படை படையின் தளபதியும், இராணுவத்தினரும் இணைந்து மரக்கறி கடையினை புதிதாக அமைத்து நேற்று முன்தினம் குறித்த அன்னையிடம் கையளித்துள்ளார்கள்.
குறித்த கடை கையளிக்கும் நிகழ்வில்56 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 561 மற்றும் 562
காலாட்படையின் தளபதிகள், 16 ஆவது சிங்க றெஜிமன்ட் மற்றும் 17 ஆவது விஜயபாகு
றெஜிமன்ட் ஆகிய படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகள், இராணுவத்தினர், பொதுமக்கள் எனப்
பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







