அமைதியான போராட்டங்கள் மீது இராணுவ அதிகாரம் பயன்படுத்தப்படாது: பாதுகாப்பு அமைச்சு
அமைதியான போராட்டங்கள் மீது இராணுவ அதிகாரம் பயன்படுத்தப்படாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை இலக்கு வைத்து எந்தவிதமான இராணுவ அதிகாரங்களையும் பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்கும் இராணுவத்தை ஈடுபடுத்தப் போவதில்லை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கை இராணுவம் வன்முறையை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் மக்களை அடக்குவதற்கு திட்டமிடுவதாகவும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் பொய்யான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் இராணுவம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
குற்றச்சாட்டை நிராகரிக்கும் இராணுவம்

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
