கசிப்பு வியாபாரிகளிடம் கப்பம் பெற்ற இராணுவ புலனாய்வாளர்கள்
நிட்டம்புவை மாதலானே என்ற பகுதியில் கசிப்பு விற்பனை செயும் பெண்ணிடம் கப்பம் பெற்றதாக கூறப்படும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் நான்கு பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனனர்.
நிட்டம்புவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஓ.ஜி அபேரத்னவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவை பிரதேசத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படும் வீடுகளுக்கு சென்று தம்மை பொலிஸ் அதிகாரிகள் என அறிமுகம் செய்து, ஆயிரக்கணக்கான ரூபாவை இவர்கள் கப்பமாக பெற்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கள்ளச் சாரயம் விற்பனை தொடர்பான நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் இருப்பதற்காக தமக்கு பணத்தை வழங்குமாறு கூறி, இவர்கள் கசிப்பு விற்பனையாளர்களிடம் கப்பம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Bigg Boss: பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற கதறியழும் சாண்ட்ரா... பிக்பாஸ் எடுக்கும் முடிவு என்ன? Manithan