முன்னாள் போராளி கொலை: மனைவி மற்றும் பிறிதொரு நபருக்கு தடுப்பு காவல்
முன்னாள் போராளியான நடராசா தனராஜ்ஜின் கொலை சந்தேக நபர்களான அவரின் மனைவி மற்றும் பிறிதொரு நபரையும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிஸார் முற்படுத்தினர்.
இதன் போது எதிர்வரும் 22.12.2021 வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள பொலிஸாருக்கு மன்று அனுமதி வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிறிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
குறித்த சம்பவம் கடந்த 09.12.2021 அன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில்
விசாரணை மேற்கொண்ட மாங்குளம் பொலிஸார் சந்தேக நபரான மனைவியின் வாக்குமூலத்தை
அடிப்படையாகக்கொண்டு மனைவியையும், மற்றுமொரு சந்தேக
நபரையும் கைது செய்ததுடன், நேற்றையதினம் (18) சான்று பொருட்களையும்
மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் மேடையில் தொகுப்பாளினி பிரியங்கா.. பிரபல நடிகரிடம் வாங்கிய அடி, புரொமோ Cineulagam
