நாமலுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையா! மொட்டு கட்சியின் முக்கிய புள்ளி தெரிவித்துள்ள கருத்து
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாமலை இரண்டு வருடம் சிறையில் அடைத்தாலும் பயமின்றி சிறையில் இருந்துவிட்டு வருவார் என மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நண்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட நிலையில் மீண்டும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
விளக்கமறியல் உத்தரவு
நாமல் ராஜபக்சவிற்கு 29ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாமலை இரண்டு வருடம் சிறையில் அடைத்தாலும்.அந்த இரண்டு ஆண்டைப் பயமின்றி சிறையில் இருந்துவிட்டு வருவார் என மொட்டுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் நாமலின் நண்பருமான மிலிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பெண்ணிடம் கேட்ட மோசமான இலஞ்சம்! பகிரங்கப்படுத்திய பெண்..
தென்னிலங்கை வலையொளி தளமொன்றுக்கு வழங்கிய சிறப்பு கலந்துரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எந்த தடங்கல் வந்தாலும் நாம் இந்த மண்ணில் அரசியல் செய்வோம். சிறையில் அடைத்து, சித்திரவதை செய்து, கெட்ட வார்த்தைகள் பேசி எமது அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது.
அதிகாரத்தை கைப்பற்றும் எமது வழி
ஒரு பயங்கரவாத அமைப்புடன் நாம் அரசியல் செய்யவில்லை. எமது அரசியல் கிராமத்து மக்களுடன்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி -பாராளுமன்றத்தை விடப் பெரியது என்று கூறி பல விளையாட்டுகளில் பாடம் கற்றுக்கொண்ட மனிதர்கள் தான் நம்மிடம் இருக்கிறார்கள்.
மகிந்த ராஜபக்ச இந்நாட்டின் மிகப்பெரிய மக்கள் தலைவராக இருந்தபோதும் இரண்டு தவணைகளுடன் வீட்டிற்குச் சென்றார். கோட்டாபய ராஜபக்ச மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் வீட்டிற்குச் செல்ல நேரிட்டது.
அதனால் யாரும் இதில் 50, 60 ஆண்டுகள் அதிகாரத்தில் இருக்க நிரந்தரக் குத்தகை எடுக்கவில்லை. மக்கள் தேவையான நேரத்தில் முடிவெடுப்பார்கள்.

ஆட்சியை கைப்பற்ற எந்தவொரு திட்டமும் தேவையில்லை.மக்களிடம் உண்மையைப் பேசினால் போதும்.வீடுகளுக்குத் தீவைத்து, பாராளுமன்றத்திற்குத் தீவைத்து, நீதிமன்றங்கள் மீது குண்டுவீசி அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் நினைக்கலாம்.
எமது அரசியல் கட்சி ஒருபோதும் அவ்வாறு நினைத்ததில்லை. நாம் அதிகாரம் எடுப்பதற்கு ஒரே ஒரு வழியைத்தான் நினைக்கிறோம்.
அதுதான் சரியான நேரத்தில் நியாயமான ஒரு தேர்தல் நடக்கும்போது, மக்கள் அத்தேர்தலுக்குச் சென்று வாக்களித்து, நாம் தேர்தலின் மூலம் வெற்றியடைவோம் என்பது மட்டுமே. அதற்கான அரசியல் செயல்பாட்டில்தான் நாம் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் மீண்டும் அவசரமாக நாடு திரும்பும் ஷிரந்தி ராஜபக்ச! அறுவை சிகிச்சையிலும் சிக்கல்