இலங்கையின் அடக்குமுறை வரி நாட்டின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்: மிலிந்த மொரகொட
இலங்கையின் தற்போதைய அடக்குமுறை வரி ஆட்சி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட (Milinda Moragoḍa) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பல உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் வணிகத்துறையினர் வெளிநாடுகளுக்கு தமது முயற்சிகளை இடமாற்றம் செய்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்மறை பொருளாதார வளர்ச்சி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புதிய முதலீடுகளும் கணிசமாகக் குறைந்துள்ளதுடன் வரியமைப்பு ஓரளவுக்கு பொருளாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், ஏழைகளை அதிக ஆதரவற்றதாக ஆக்கியுள்ளதுடன் நடுத்தர வர்க்கத்தை வறுமையை நோக்கி செலுத்துகிறது.
எனவே இந்த வரி ஆட்சி, பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையானது மற்றும் நீடிக்க முடியாதது.
இந்த செயற்பாடு, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேலாக இலங்கை 3 வீத வளர்ச்சிக்கும் மேல் செல்ல முடியாது.
ஆகவே, இந்த நிலைமையை சரிசெய்யப்பட வேண்டுமானால், வரிவிதிப்பு விகிதத்தை குறைக்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |