தமிழாக்கம் பெற்ற மிலிந்த மொர கொடவின் நூல்
முன்னாள் நீதி அமைச்சரும், இந்தியாவுக்கான இலங்கை தூதுவருமான மிலிந்த மொர கொடவினால் (Milinda Moragoda) சிங்கள மொழியில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தமிழாக்கமான 'மலரும் யுகத்திற்கு' எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் (01.06.2024) கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் நடைபெற்றுள்ளது.
இந்த வெளியீட்டு நிகழ்வில் வரவேற்பு நடனத்தை திவ்ய சுதன் வழங்கியுள்ளதோடு அடுத்து இடம்பெற்ற வரவேற்புரையினை பைண்டர் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.பாலசுந்தரம் நிகழ்த்தியுள்ளார்.
நூலின் முதற் பிரதி
அதனையடுத்து, பிரதம உரையினை கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் Dr.k. ரகுபரன் வழங்க, சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையத்தின் மாணவர்களது நடனம் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை, இந்த நூலின் மொழியாக்கத்தை செய்த வயலட், மொரகொடவின் பாதிரியாரான ஜெனிபர் மொரகொடவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இந்நிகழ்வில், முன்னாள் பிரதம நீதிபதி ஸ்ரீபவன், சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தின் தலைவர் பேராசிரியர் அன்குரன் டுட்டா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளியல் விரிவுரையாளர் கணேச மூர்த்தி, சட்ட கற்கைகள் மற்றும் சமூக விஞ்ஞான துறை சிரேஷ்ட விரிவுரையாளர் யசோதரா கதிர்காம தம்பி ஆகியோர் சிறப்பு உரையாற்றியுள்ளனர்.
மேலும், குறித்த நூலின் முதற் பிரதி நூலாசிரியர் மிலிந்த மொரகொடவினால் வருகை தந்த அனைத்து அதிதிகள் மற்றும் துறை சார்ந்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |