அரசாங்கத்தின் பல இலட்ச ரூபாய் ஒதுக்கீட்டில் இடம்பெறும் பண்டிகை
மிஹிந்தல ரஜமஹா விகாரையில் நடைபெறும் பொசன் பண்டிகையின் அடிப்படை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் அரசாங்கம் 31 இலட்சம் ரூபாவை வழங்கியதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அனுராதபுரத்தை மையமாக கொண்டு நடைபெற்று வரும் எஞ்சிய நிகழ்வுகளுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை தேடும் பணி
திருவிழா நடவடிக்கைகளுக்கு மாத்திரமே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும், பொசன் விழா நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பணம் வழங்காததால் பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மிஹிந்தல ரஜமஹா விகாரையின் பீடாதிபதி தம்மரதன தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |