இருளில் மூழ்கிய மிஹிந்தலை ரஜமஹா விகாரை: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மின்சார நிலுவைத் தொகை செலுத்தப்படாமை காரணமாக நேற்று மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வளவ ஹெங்குனாவேவே தம்மரதன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் அரசியல் ரீதியாக பலியாக்கப்பட்டுள்ளதாக வளவா ஹெங்குனாவேவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை புனித நகரத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையிலேயே மின்சார சபை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இதன்காரணமாக பகுதியில் உள்ள விகாரை அறைகள், பொலிஸ் நிலையம், தொல்லியல் நிலையங்கள் இருளில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், தொல்லியல் துறைக்கு அரசு உடனடியாக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விகாரையில் வசிக்கும் பௌத்த துறவிகள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மின்சார சபை கூறுவதைக்போன்று 4.1 மில்லியனை செலுத்தும் நிலையில் தாம் இல்லை என்று தேரர் கூறியுள்ளார்.
மேலும், பிக்குகள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு கட்டணம் செலுத்தக்கூடிய தனியான மானிகளை பொருத்துமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
4.1 மில்லியன் நிலுவைத் தொகை
இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள அனுராதபுர இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியலாளர் ஜே.எம்.எப். ஜயவர்த்தன,
“2022 ஆம் ஆண்டு முதல், குறித்த விகாரைக்கான மின்சாரக்கட்டண நிலுவைத்தொகை 4.1 மில்லியன் ரூபா செலுத்தவேண்டியிருந்தது.
இதன் அடிப்படையில் முன்னறிவிப்பின் பின்னர் மின்சார சபை நேற்று இரவு 11.00 மணியளவில் மின் இணைப்பை துண்டிக்க வேண்டியிருந்தது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.