மிகிந்தலை நாடகத்தில் நடித்த சஜித்! சாடுகிறார் பாலித
மிகிந்தலையின் மின்சாரக் கட்டண நாடகத் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக எழுதியிருந்தால் அரச நாடக விழாவில் கூட விருதுகளை வென்றிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
மிகிந்தலை விகாரையில் மின் துண்டிக்கப்பட்டதாக தேரர் கூறியவுடன், நாடகத்தின் அடுத்த காட்சி நடிகர் சஜித் பிரேமதாச உடனடியாக முன்னோக்கி பாய்ந்து மின் கட்டணத்தை செலுத்தும் காட்சி, பார்வையாளர்கள் நினைத்தபடியே அனைத்தும் நடந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
ஒரு நல்ல நாடகத்தின் அடுத்த காட்சியை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் "மிகிந்தலை வெளிச்சம்" நாடகத்தில் நடிகர் சஜித் பிரேமதாச வழமை போல் நன்றாக நடித்ததாக ஐ.தே.க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நடிகர் சஜித் பிரேமதாச

பௌத்த மதத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற மிகிந்தலை மகானின் பெயரை மந்தமான அரசியல் நாடகங்களில் பயன்படுத்த வேண்டாம் என தாம் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam