மிஹின் லங்கா நிதி முறைகேடு விவகாரம்: சஜின் வாஸுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
மிஹின் லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த அதிவிசேட குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்தின் நிர்வாகப் பணிகளின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, போதிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டுள்ள கொழும்பு மேல் நீதிமன்றம், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
முன்னாள் அரசின் முக்கிய பதவிகளில் இருந்த சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக மீண்டும் ஒரு ஊழல் வழக்கு ஆரம்பமாகியுள்ளமை அரசியல் மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.