இலங்கை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்வது பெரும் பிரச்சினையாக மாறி வருவதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் (SLATCA) தெரிவித்துள்ளது.
உள்ளூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் ராஜித செனவிரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய கட்டுப்பட்டாளர்களுக்கான நேர்காணல்
"ஒரு சர்வதேச ஆட்சேர்ப்பு நிறுவனம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் 20 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களை பணியமர்த்துவதற்கான நேர்காணல்களை மேற்கொள்கிறது.
ஒரு பெரிய அளவிலான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஒரே நேரத்தில் வெளியேறினால் சிக்கல் இருக்கும்,"
"நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து குடியேற்றத்தைத் தடுக்க ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இந்த திட்டம் வெற்றியடைந்தால் பெரிய பிரச்சினை இருக்காது“ என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

ராஜியை சிக்கலில் மாட்டிவிடும் சக்திவேல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
