சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் நடுக்கடலில் மாயம்!
இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக படகில் மலேசியா சென்ற 30 புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவின் ரியூ தீவு அருகில் விபத்தில் சிக்கி காணாமல்போயுள்ளனர்.
இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவை சென்றடையும் நோக்கத்துடன் 30 இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற படகு இந்தோனேசியாவின் ரியூ தீவுகள் அருகே விபத்தில் சிக்கியுள்ளது.
இப்படகிலிருந்து 23 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் , 7 புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும், தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடரும் படகு விபத்துக்கள்
இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மேற்கு Nusa Tenggara மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவுக்கு முறையான ஆவணங்களின்றி இந்தோனேசிய தொழிலாளர்கள் செல்வது தொடர் சிக்கலாக இருந்து வரும் நிலையில், அவ்வாறு செல்பவர்கள் இவ்வாறான படகு விபத்துகளில் காணாமல்போகும் சம்பவங்கள் அல்லது மரணிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
