மூடிய அறைக்குள் கோட்டாபய நடத்திய பேச்சுவார்த்தை..! பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்திய உதயங்க வீரதுங்க

Gotabaya Rajapaksa Ministry of Defense Sri Lanka Ukraine Sri Lanka Air Force
By Steephen Aug 26, 2022 08:48 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கல்களின் போது தரகு பணம் பெறுவதற்காக விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சில் அறையை மூடிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபயவுக்கான செலவுகளை செய்பவர்கள் யார்?

மூடிய அறைக்குள் கோட்டாபய நடத்திய பேச்சுவார்த்தை..! பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்திய உதயங்க வீரதுங்க | Mig Aircraft Fund Scam Gotabaya

மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கலுடன் சம்பந்தப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் சிங்கப்பூரில் இருக்கின்றனர். தற்போது வெளிநாட்டில் இருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் ஹோட்டல் கட்டணங்களை இவர்களே செலுத்துவார்களாக இருக்கலாம்.

அப்படி இல்லை என்றால் எப்படி ஹோட்டல் கட்டணத்தை செலுத்துவது. மிக் விமான கொள்வனவு கொடுக்கல், வாங்கல் தொடர்பான விடயங்களை மூடி மறைக்க அன்றைய நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ரவி வித்தியலங்காரவுக்காக பெருமளவில் பணத்தை செலவிட்டனர்.

அவர் மிரிஹானவில் உள்ள கோட்டாபயவின் வீட்டுக்கு சென்றுள்ள போதிலும் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லை. பீ. அறிக்கையில் கோட்டாபயவின் வாக்குமூலம் இல்லை.

எனக்கு அந்த கொடுக்கல், வாங்கலுக்கும் எந்த சம்பந்தமில்லை. மிக் விமானங்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியது யார்? அதற்கான அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்தது யார்?.

பிரதான சூத்திரதாரி கோட்டாபய

மூடிய அறைக்குள் கோட்டாபய நடத்திய பேச்சுவார்த்தை..! பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்திய உதயங்க வீரதுங்க | Mig Aircraft Fund Scam Gotabaya

உக்ரைனில் இருந்து மிக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்த போது அறைக்குள் வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது யார்?. அவர்கள் இலங்கை வந்து பாதுகாப்பு அமைச்சுக்கு சென்று என்னுடன் பேசவில்லையே. மிக் கொடுக்கல், வாங்கலில் பிரதான சூத்திரதாரி கோட்டாபய. ஏன் அவரிடம் வாக்குமூலம் பெறவில்லையே.

மிக் கொடுக்கல், வாங்கல் தொடர்பான மோசடி வழக்கில் 7 சந்தேக நபர்கள் இருக்கின்றனர். அவர்களில் நான் ஒருவன் மாத்திரமே இலங்கையில் இருக்கின்றேன்.

இவர்களில் நான்கு பேர் சிங்கப்பூரில் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிகப்பு அறிக்கை பிடியாணை பிறப்பித்துள்ளனர்.

மூடிய அறைக்குள் கோட்டாபய நடத்திய பேச்சுவார்த்தை..! பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்திய உதயங்க வீரதுங்க | Mig Aircraft Fund Scam Gotabaya

கோட்டாபயவிடம் தனிப்பட்ட ரீதியில் நன்மையடைந்தவர்களே அவருக்கு தற்போது பணத்தை செலவு செய்து வருகின்றனர். மாலைதீவு, தாய்லாந்து, சிங்கப்பூர் ஹோட்டல்களுக்கு இவர்களே பணத்தை செலவு செய்துள்ளனர்.

கோட்டாபய ஏன் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும்?. சிங்கப்பூர் என்பது சிறிய நகரம், ஏன் அதனை தெரிவு செய்ய வேண்டும். உலகில் எத்தனை நாடுகள் இருக்கின்றன?.

அங்கு அவரை உபசரிக்கக் கூடியவர்கள் இருக்கின்றனர். இதன் காரணமாகவே அவர் சிங்கப்பூரை தெரிவு செய்தார். கோட்டாபய ராஜபக்ச ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்துள்ளார்.

அந்த கடவுச்சீட்டு இருந்தால், எந்த நாட்டுக்கும் செல்வதற்கான விசா அனுமதி கிடைக்கும். தாய்லாந்தில் மூன்று மாத கால விசா வழங்கப்பட்டுள்ளதே.

முன்னாள் ஜனாதிபதியை சுற்றி இருந்த அவரது அடிவருடிகளுக்கு அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்தும் தேவை இருக்கின்றது.

லலித் வீரதுங்க மற்றும் காமினி செனரத் ஆகியோர் ஜனாதிபதியிடம் இருந்துகொண்டு நன்றாக சம்பாதித்துக்கொண்டனர் எனவும் உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US