யாழில் நள்ளிரவில் நடந்த கொடூரம் - முற்றாக சேதமாக்கப்பட்ட வீட்டு உடைமைகள்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் அடையாளம் தெரியாத இருவர் வீடு ஒன்றில் புகுந்து உடைமைகளை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்கள் மீதும் தாக்கலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(03.05.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இரவு வீட்டிலுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிற்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர், அங்கிருந்தவர்கள் மீது தாக்கதலை மேற்கொண்டுள்ளனர்.
அடையாளம் தெரியாதவர்கள் நடத்திய தாக்குதல்
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீதும் மோசமான தாக்குதலை மேற்கொண்ட பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மகனை அழைத்து வருமாறு கூறி மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வீட்டிலுள்ள உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மதுபோதையில் இருந்தவர்கள் அருகில் இருந்த வீட்டையும் சேதப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ள மருதங்கேணி பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
11 பந்தில் 50 ரன் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி! உலக சாதனை..இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri