மத்திய கிழக்கில் பதற்றநிலை: நாடு திரும்பும் கட்டாயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாடு திரும்பும் கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த சூழ்நிலை அதிகரித்துள்ளது.
இது குறித்து இன்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்காக 5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டுப் நிலை ஏற்படாமல் இருக்க, பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆபத்தான வகையில் எல்லைகளை கடக்காமல் பாதுகாப்பான முறையில் செயற்படுமாறு இலங்கை தொழிலாளர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவை ஏற்படும் பட்சத்தில் தொழிலாளர்களை கடல் அல்லது விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
