மத்திய கிழக்கு நாடொன்றில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையாக ஈராக்கில் அமெரிக்கா தனது படைத்தளத்தை அமைத்துள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஈராக்கில் இருந்து பெரும்பாலான எண்ணிக்கையில் அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்பட்டனர்.
இதனையடுத்து ஈராக்கில் தற்போது 2 ஆயிரத்து 500 அமெரிக்க படையினர் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளத்தை குறிவைத்து ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் அவ்வப்போது ரொக்கட் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு கட்டமாக ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது 4 ஏவுகணைகள் அமெரிக்க தூதரகத்தை தாக்கியுள்ளன. இதன்போதே நான்கு பேர் காயமடைந்தனர்.
எனினும் இந்த தாக்குதல்களுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam