வவுனியாவில் உள்ள மத்தியத்தர வர்க்க காணிகள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை: கு.திலீபன் (photos)
வவுனியாவில் உள்ள மத்தியத் தர வர்க்க காணிகளில் குடியிருப்பவர்களுக்கு அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பில் நேற்றைய தினம் (15.02.2023) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி நடவடிக்கை
வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் மத்தியத்தர வர்க்கத்தினருக்கு விவசாய தேவைகளுக்காகக் காணிகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் அதிகளவிலான நிலங்கள் அவர்களால் கைவிடப்பட்டிருந்த நிலையில், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேறி வாழ்வாதாரப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
ஆனாலும், அவை மத்தியத்தர வர்க்கத்திற்கு வழங்கப்பட்ட காணிகள் எனத் தெரிவித்துக் குடியிருக்கும் மக்களுக்கு ஆவணங்கள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனைக் கடந்த பல வருடங்களாக அப் பகுதிகள் மக்கள் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதும் எந்தவித முன்னேற்றமும் இல்லாது இருந்தது.
இந்நிலையில், இந்த மக்களின் கோரிக்கை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு என்னால் கொண்டு வரப்பட்டிருந்தது. இது தொடர்பாகக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

காணிப் பிரச்சினைக்கு தீர்வு
இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் ஆவணங்கள் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அவர்களும் எனக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வனவளத் திணைக்களத்தால் எல்லையிடப்பட்டுள்ள மேய்ச்சல் தரை மற்றும் வயல் நிலங்களையும் எனது கோரிக்கைக்கு அமைவாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் எழுத்து மூலம் ஜனாதிபதியின் செயலாளரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால்
விரைவில் பல மக்களது காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதுடன், ஆவணங்களும்
வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri