அதிரடி ஆட்டத்தால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி
புதிய இணைப்பு
ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில், அதிரடியாக விளையாடிய மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது.
குறித்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 197 என்ற இலக்கை மும்பை அணிக்கு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய குஜராத் அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அதிரடியான ஆரம்ப இணைப்பாட்டத்தை வழங்கினர்.

அதனையடுத்து, களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 19 பந்துகளில் 52 ஓட்டங்களை குவித்தார். அதற்கமைய, 15.3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இலகுவாக எட்டியது.
மேலும், புள்ளிபட்டியலில் எந்தவொரு மாற்றமும் இல்லாது மும்பை அணி 8ஆவது இடத்திலும் பெங்களூரு அணி 9ஆவது இடத்திலும் தொடர்ந்தும் உள்ளன.
முதலாம் இணைப்பு
நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் தொடரின் 25ஆவது போட்டியில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்கின்றன.
குறித்த போட்டியானது, இன்றையதினம் (27.03.2024) மும்பை வான்கடே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெறுகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

புள்ளிபட்டியல்
அத்துடன், புள்ளிபட்டியலில் மும்பை அணி 8ஆவது இடத்திலும் பெங்களூரு அணி 9ஆவது இடத்திலும் உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam