சென்னையுடன் பலப்பரீட்சையை எதிர்க்கொள்ள இருக்கும் குஜராத்..! ஐ.பி.எல் இறுதிப்போட்டி
நேற்றையதினம்(26.05.2023) இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
மும்பை அணிக்கு வெற்றி இலக்காக 234 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 18.2 ஓவர்கள் முடிவில் 171 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இந்த வெற்றியைத்தொடர்ந்து குஜராத் அணி வரும் (28.05.2023) ஆம் திகதி சென்னை அணியை இறுதிப்போட்டியில் சந்திக்க உள்ளது.
முதலாம் இணைப்பு
நடப்பு ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டிக்கு தெரிவாகும் இரண்டாவது அணியை தெரிவு செய்வதற்கான போட்டி தற்போது இடம்பெற்று வருகிறது.
குறித்த போட்டியில் மும்பை அணி குஜராத் அணியை எதிர்கொள்கிறது. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
தற்போது வரை 15 ஓவர்கள் முடிவில் குஜராத் 166/1 விக்கெட்டுக்கள் இழக்க கில் 53 பந்துகளில் 117 ஓட்டங்களும் சுதர்ஷன் 21 பந்துகளில் 27 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
? for the inimitable @ShubmanGill!
— Cricbuzz (@cricbuzz) May 26, 2023
8⃣0⃣0⃣ runs in #IPL2023, and he goes past @faf1307's tally of 720 runs!
3️⃣ centuries in 4️⃣ games! Can anyone stop this man?#IPLPlayOffs #IPLQualifier2 #GTvsMI #MIvsGT pic.twitter.com/HO4yxG6WFH
இதேவேளை சுப்மன் கில் 2023 ஆம் ஆண்டு ஐ.பி.ல் தொடரில் 800 ஓட்டங்களை கடந்துள்ள நிலையில் தனது 3ஆம் சதத்தையும் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் முதலாவது பிளேஓப் சுற்றில் குஜராத் அணியை வீழ்த்தியதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.