ரஷ்யாவில் விபத்துக்குள்ளான உலங்குவானுர்தி: 17 பேரின் சடலங்கள் கண்டுபிடிப்பு
ரஷ்யாவில் (Russia) பயணிகளுடன் காணாமல் போயிருந்த எம்.ஐ -8 (Mi-8) உலங்குவானுர்தி விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து 17 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த உலங்குவானுர்தியானது வாக்கசெட்ஸ் எரிமலை பகுதியில் இருந்து நிக்கோலேவ்கா கிராமத்தில் உள்ள தளத்திற்கு புறப்பட்ட சில மணி நேரங்களில் தொடர்பை துண்டித்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதில் மூன்று பணியாளர்கள் மற்றும் 19 பயணிகள் என மொத்தம் 22 பேர் சென்றுள்ள நிலையில் தற்போது 17 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணி
இந்நிலையில், நேற்யை தினம் அதிகாலை உலங்குவானுர்தியின் எச்சங்களை 900 மீட்டர் உயரமுள்ள மலை பகுதியில் மீட்பு குழுவினர் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
A Mi-8 helicopter with 22 people on board vanished in Russia’s remote Kamchatka region. Nearly 24 hours later, the wreckage was found — no survivors
— NEXTA (@nexta_tv) September 1, 2024
The helicopter suddenly lost contact yesterday morning, and poor visibility hampered rescue efforts. When the wreckage was… pic.twitter.com/u5ZI5E3jfw
இது தொடர்பில் அந்நாட்டு அவசரகால அமைச்சகம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் அதில் உலங்குவானுர்தியின் எச்சங்கள் காணப்படுகின்றமை காண்பிக்கப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து, மீட்பு பணியாளர்கள் விபத்துக்குள்ளான பகுதியில் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
An Mi-8 helicopter has disappeared in Kamchatka with 22 people on board
— NEXTA (@nexta_tv) August 31, 2024
The helicopter was en route Vachkazhets volcano - Nikolaevka village, and at the appointed time did not land at the destination point and is not in contact. pic.twitter.com/MZNatiTN6W
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |