அமெரிக்க எல்லைக்கு 10000 துருப்புகள்! மெக்சிகோவின் புதிய நகர்வு
அமெரிக்காவுடனான எல்லை பிரச்சினைக்கு மத்தியில் 10 ஆயிரம் துருப்புகளை எல்லைகளுக்கு அனுப்புவதாக மெக்சிகோ தீர்மானித்துள்ளது.
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மெக்சிகோ ஜனாதிபதி ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
அமெரிக்க - மெக்சிகோ
இதில் குறிப்பாக அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது.

இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மெக்சிகோ வடக்கு எல்லைக்கு 10,000 துருப்புக்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam