மெட்ரோ பேருந்து சேவை குறித்து வெளியான தகவல்
கொழும்பு மெட்ரோ பேருந்து சேவை செப்டம்பர் மாத இறுதியில் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு, கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்ட பேருந்து வலையமைப்பை விவரிக்கும் வரைபடங்களை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், இந்தச் சேவை பயணிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்றும், செப்டெம்பர் மாத இறுதியில் கூடுதல் செயல்பாடுகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
சேவைகள் விரிவுபடுத்தப்படும்
லங்கா மெட்ரோ டிரான்சிட் என்ற பெயரில் வெளியிடப்பட்ட வழித்தட வரைபடங்கள், கொழும்பை பல முக்கிய புறநகர்ப் பகுதிகளுடனும் போக்குவரத்து மையங்களுடனும் இணைக்கும் ஏழு சேவைகளை விவரிக்கின்றன.

இந்த வலையமைப்பு மஹரகம, நுகேகொட, பத்தரமுல்ல, மாலபே, தெஹிவளை, மொரட்டுவ மற்றும் ஜா-எல உட்பட பல முக்கிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது.
செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து சேவைகள் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தாலும், ஒவ்வொரு வழித்தடத்திற்குமான சரியான தொடக்கத் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri