பேஸ்புக் நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதம்
பேஸ்புக் நிறுவனமான மெட்டாவுக்கு 1.2 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பை மீறி ஐரோப்பிய ஒன்றியப் பயனர் தரவை அமெரிக்காவிற்கு மாற்றியதற்காக மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அயர்லாந்து கட்டுப்பாட்டாளர் இன்று அறிவித்துள்ளார்.
தகவல் பரிமாற்ற சட்டத்தை மீறியதாக, மெட்டாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் குற்றச்சாட்டுகள் உறுதியாகியுள்ளது.
பொது தரவு பாதுகாப்பு
அதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக செயல்படும் அயர்லாந்து தரவு பாதுகாப்பு ஆணையம், 1.2 பில்லியன் யூரோக்கள் நிர்வாக அபராதம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.
பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை எனப்படும் ஐரோப்பாவின் கையொப்ப தரவு தனியுரிமைச் சட்டத்தின் கீழ் இதுவரை விதிக்கப்பட்ட அபராதம் மிகப்பெரியதென மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு அபராதம்
இந்த நிலையில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்துள்ளோம் என மெட்டா நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நீதிமன்றம் மூலம் தடை கோருவோம் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஆண்டில் இது 3வது முறையாக மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
