பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா மீண்டும் பலரை பணிநீக்கம் செய்ய உள்ளது
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றிய அறிவிப்புகள் அடுத்த வாரத்தில் வெளியாகும் எனவும் பொறியியல் அல்லாத பிரிவுகளை சேர்ந்தவர்களே பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.
பணிநீக்க நடவடிக்கை
இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் நடவடிக்கை என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக பெரும்பாலானோரை பணிநீக்கம் செய்யும் முதலாவது பெரிய தொழிநுட்ப (டெக்) நிறுவனமாக இது காணப்படும்.
பணிநீக்கம் மட்டுமின்றி மெட்டா நிறுவனம் சில திட்டங்கள் மற்றும் குழுக்களை நிறுத்தவும் முடிவு செய்து இருப்பதாக தெரிகின்றது.
இதுபற்றிய செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு மெட்டா பதில் அளிக்கவில்லை.
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri