கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
இலங்கையின் பல மாவட்டங்களில் கடுயைமான இடி மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இடியுடன் கூடிய கனமழையும் கடும் மின்னல்களும் எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்றும் அறிவித்துள்ளது.
மத்திய, வட மத்திய, வட மேற்கு, கிழக்கு, ஊவா, சபரகமுவ மாகாணங்களில் இவ்வாறு கடுயைமான இடி மின்னல் தாக்கம் ஏற்படும் என தெரிவித்துள்ளது. வடமாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடி மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும் சாத்தியங்கள் உண்டு என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்: வயல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், குளம், ஏரி போன்ற திறந்த இடங்களில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது வயருடன் கூடிய தொலைபேசிகள் மற்றும் மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சைக்கிள், டிராக்டர், படகு போன்ற திறந்த வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



